திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் மின்சக்தி அமைச்சசருக்கும் மின்சார சபை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், அதில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
இதனால் திட்டமிட்டவாறு போராட்டம் நடக்கும் என்றும், இதனால் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பின்னர் நாடு முழுவதும் மின்தடை ஏற்படலாம் என்றும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சார கொள்வனவின் போது, நிலவும் போட்டித்தன்மையை இல்லாதொழித்து மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் நாளைய தினம் பாராளுமன்றத்தில் சம்பிக்கப்படவுள் நிலையில், அதனை சமர்பிக்கக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.