முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சீஐடியினர், அந்த வழக்கில் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான விசாரணை நளைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(3)