பாராளுமன்றத்தில் தான் இனி சுயாதீன எம்.பியாக செயற்படவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் விசேட உரையை மேற்கொண்டு இன்று இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்க்கட்சி பக்கத்தில் தான் சுயாதீன எம்.பியாகவே இயங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இப்போது அமைக்கப்பட்டுள்ளது சர்வ கட்சி அரசாங்கமாக இல்லாத காரணத்தினால் தனக்கு அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.