நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை கலந்துரையாடினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.
இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.