January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர நானே காரணம்”

File Photo

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு நானே  காரணம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, சரத் பொன்சேகாவை கிண்டல் செய்யும் வகையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பொன்சேகா உரையாற்றும் போது, அதனை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

இவ்வேளையில் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இன்றி இருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்காக தனது கழுத்தை கொடுத்தமைக்கான நன்றிக் கடனாக பிரதமர் இதனை கூறியிருக்கலாம் என்று பொன்சேகா கூறினார்.

மேலும், ரணிலிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதி தன்னிடமே பிரதமராக பதவியேற்குமாறு கோரியதாகவும், ஆனால் சில நிபந்தனைகளை முன்வைத்து தான் அந்தப் பதவியை நிராகரித்ததாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

தான் செய்த தியாகத்தினாலேயே இன்று பிரதமர் ஆசனத்தில் ரணில் இருக்கின்றார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.