January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மற்றுமொரு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தண்டனை!

மற்றுமொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது, தனது தவறை ரஞ்சன் ராமநாயக்க ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வேறு வழக்கொன்றில் ரஞ்சன் ராமநாயக்க, 4 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.