January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒருவருடத்திற்கு அமைச்சர்கள் சம்பளம் பெற மாட்டார்கள்!

ஒரு வருடத்திற்கு சம்பளம் இன்றி பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, பிரதமரினால் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டதாகவும், இதற்கு அனைத்து அமைச்சர்களும் இணங்கியதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.