தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனது எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பின்னரே தான் பதவி விலகுவேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
‘புளும்பெர்க்’ செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலொன்றிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு 5 வருடங்களுக்காக மக்களினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தான் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.