முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
53 வயதுடைய தங்காலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.