January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க யோசனை!

பெறுமதி சேர் வரிகள் உள்ளிட்ட முக்கிய வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகிலஇலங்கை  பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜனவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் பணிஸ் விலையை 100 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காது தற்போதைய விலையிலேயே பேண வேண்டுமாயின் தங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.