November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆம் திருத்தம் குறித்து ரணிலுடன் பஸில் கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ சந்தித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பிரச்சனைகள் குறித்த பஸில் ராஜபக்‌ஷ, பிரதமரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தத் திருத்தத்தில் சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவெனவும், அதனை தயாரித்தது யார் என்றும் இவ்வேளையில் பஸில் தரப்பினரால் பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதன்போது, தனக்கு அதுபற்றி தெரியாது என்று பிரதமர் கூறியுள்ளதுடன், இது ஜனாதிபதியின் கோரிக்கைகளில் ஒன்றே என்று விளக்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பிரதமருடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சரவையில் 21 ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.