January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தேசிய மகளிர் அணியில் களமிறங்கும் கலையரசி!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிளிநொச்சியை சேர்ந்த சதாசிவம் கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, புனித தெரேசா மகளிர் கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கலையரசி படித்து வருகின்றார்.

கலையரசியின் தந்தை சதாசிவம், கூலி வேலை செய்கிறார்.

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது காணப்பட்ட ஆர்வமே தன்னை தேசிய அணிக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று கலையரசி தெரிவித்துள்ளார்.

தனது அப்பா கிரிக்கெட் ரசிகர் என்பதனால் அவர் தன்னை ஊக்கப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார் என கலையரசி கூறியுள்ளார் .

பாடசாலைகளுக்கிடையிலும், மாவட்ட மற்றும் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகள் புரிந்துள்ள கலையரசி, 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டப் போட்டிகளிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய மகளிர் அணிக்கான அணி வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றபோது, இதில் கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.