வட் மற்றும் தொலைத் தொடர்பு வரிகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு ஏற்றால் போன்று தொலைபேசி கட்டணங்களும் உயர்வடையவுள்ளன.
அரசாங்கத்தின் வரி சட்ட திருத்தங்களுக்கு அமைவாக தொலைத் தொடர்பு வரியை 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வட் வரி 8 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொலைபேசி கட்டணங்கள், இணையக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கப்படும் என்று தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.