November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மல்வானை சொத்து வழக்கு: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பஸில் விடுதலை!

மல்வானை சொத்து வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவும் மற்றும் அவரின் உறவினரான திரு நடேசனும் கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை விலைக்கு வாங்கி சொகுசு மாளிகையை அமைத்து அரச நிதியை மோசடி செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதன்போது இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லமையினால் இவர்களை அதில் இருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.