எரிவாயு விநியோகம் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இறுதியாக கையிருப்பில் உள்ள 16,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விரையில் விநியோகம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தக் காலப்பகுதியில் எரிவாயுக்காக வரிசையில் நிற்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
2500 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இந்த வார இறுதியில் கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.