November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரீன் பெர்னாண்டோவின் பதவி நளின் பண்டாரவுக்கு!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அந்தக் கட்சியின் வத்தளை தொகுதி அமைப்பாளராக நியோமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்தப் பதவிகளை ஹரீன் பெர்னாண்டோவே வகித்தார்.

அவர் கட்சியின் தீர்மானங்களை மீறி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டமையினால், அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர் கட்சியில் வகித்த பதவிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலைமையிலேயே குறித்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.