ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களிடம் ஒப்படைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.
ஶ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கூட்டத்தின் போது அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், பிரதமர் என்ற வகையில் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு நேரத்தையும் செலவிட வேண்டியுள்ளதால் கட்சி நடவடிக்கைகளை கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன ஆகியோரிடம் ஒப்படைக்க அவர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான பொறுப்புகளை செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும், கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவும் முன்னெடுக்கவுள்ளனர்.