ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சுயதொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் மகிந்த கஹந்தகம சீஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 9 ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயெ அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் இவர் சந்தேக நபர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இதனை தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.