பாடசாலைகளில் முழுமையான கூரை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் குடை பிடித்துக்கொண்டு பரீட்சை எழுதும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் நாமல் ராஜபக்ஷ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
”பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன. ஆனால் முழுமையான கூரை இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மீளாய்வு செய்து, பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தமும் நமக்குத் தேவை” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Many schools have limited facilities but not having a complete roof is unacceptable! We need to re evaluate our priorities as a nation & ensure a better future for our children. We need not only educational but political & social reform! pic.twitter.com/qDLYXsUXUS
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 1, 2022