ஜுன் 6 ஆம் திகதி முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
போதுமான டீசல் இல்லாத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்ற காரணத்தினலேயே இதுவரையில் இந்தத் தீர்மானத்தை எடுக்காது இருந்ததாகவும், ஆனால் இப்போது பரீட்சை முடிவடைந்துள்ளதால் 6 ஆம் திகதி முதல் சேவையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்திற்குள் டீசலை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பஸ் சேவைகளை வழமைக்கு கொண்டு வர முடியுமாக இருக்கும் என்றும் கொமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.