File Photo
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சீஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று மாலை, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பை இடைநிறுத்தி நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்தே அவர் இன்று கைதாகியுள்ளார்.
துமிந்த சில்வா திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று மாலை அங்கு சென்ற சீஐடியினர் அவரை கைது செய்துள்ளனர்.
அவரின் உடல்நிலை மோசமானதாக இல்லாவிட்டால் அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.