ஜே.வி.பியில் இருந்த பிரிந்து சென்ற குழுவினரால் அமைக்கப்பட்ட முன்னிலை சோஷலிசக் கட்சி, தேசிய மக்கள் சக்தியை சந்தித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2012 ஆம் ஆண்டில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குமார் குணரட்ணம் தலைமையிலான குழுவொன்று முன்னிலை சோஷலிச கட்சியை அமைத்தது.
எனினும் ஜே.வி.பியுடன் முன்னிலை சோஷலிசக் கட்சி கடந்த காலங்களில் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தியதில்லை.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில், அதில் இருந்து மக்களை மீட்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் நேற்று மாலை முன்னிலை சோஷலிசக் கட்சி சந்திப்பை நடத்தியுள்ளது.
இதன்போது கூட்டாக போராட்டங்களை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.