இலங்கையில் வட் வரிகள் உள்ளிட்ட முக்கிய வரிகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
ஜுன் முதலாம் திகதி முதல் விலை அதிகரிப்பை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதற்கமை சாராயம் போத்தல் ஒன்று 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பியர் போத்தலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.