கிளிநொச்சி நகரில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக நின்ற மக்கள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக அங்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் காலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய வாகனம் அங்கு வந்தபோதும் அவை விநியோகிக்கப்படாத காரணத்தினால் மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இதன்போது சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிசார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.