
இலங்கையில் பெறுமதி சேர் வரி 4 வீதத்தினாலும் தொலைத் தொடர்பு வரி 3.76 வீதத்தினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.
இதற்கமைய பெறுமதி சேர் 8 வீதத்தில் இருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்படும்.
அதேபோன்று தொலைத்தொடர்பு வரி 11.24 வீதத்தில் இருந்து 15 வீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற அனுமதியின் பின்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவை செயற்படுத்தப்படவுள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனி நபர் வருமான வரி, பெருநிறுவன வருமான வரி என்பனவும் அதிகரிக்கப்படவுள்ளன.