November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த சில்வாவின் விடுதலை இடைநிறுத்தப்பட்டது!

File Photo

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாராத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 2021 ஜுன் 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதற்கமை விடுதலையான துமிந்த சில்வா, வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக பதவியேற்றார்.

இந்நிலையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஹிருணிகா பிரேமசந்திரவினால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மேன்முறையீடு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பை இடைநிறுத்துவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன்படி துமிந்த சில்வா மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.