இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவியேற்றுள்ளார்.
இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதவி விலகியதை தொடர்ந்து 24 ஆவது இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று பதவியேற்றார்.
தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் ஜுன் முதலாம் திகதி முதல் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் இராணுவத் தளபதியாக பணியாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவியேற்றுள்ளார்.