January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்காக 695 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கு தீர்மானம்!

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக 695 பில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை செய்ய குறைநிரப்பு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றைய அமைச்சரவையில் முன்வைவத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகைப் பக்கேஜ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 695 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் ‘வரவு செலவுத்திட்ட சலுகைச் சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு’ கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் அமைச்சரவையில் யோசனை முன்வைத்துள்ளார்.