January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 9 வயதான சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

பாணந்துறை மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் அறிக்கையின் பிரகாரம், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமி நீரில் மூழ்கடிக்கப்பட்டமையினாலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவரின் இறுதிக் கிரியை இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை காலை முதல் காணாமல்போயிருந்த சிறுமி சனிக்கிழமை மாலை அவரின் வீட்டுக்கு அருகில் சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.