January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர் ‘ரெட்டா’ கைதானார்!

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சமூக ஊடக செயற்பாட்டாளர் ‘ரெட்டா’ என்றழைக்கப்படும் ரதிது சேனாரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இவர், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.