ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டவர்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறிப்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களில், மேல் மாகாணம் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு சென்றவர்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தற்போது நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.