November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரீன் – மனுஷவுக்கு 14 நாட்கள் கால அவகாசம்!

கட்சியின் தீர்மானங்களை மீறி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு 14 நாட்கள் கால அவசகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

தமது உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவோ, அரசாங்கத்தில் ஏதேனும் பதவியை பெற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரினதும் கட்சி உறுப்புரிமையை இடை நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர்களிடம் விளக்கங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.