January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விநியோகம் எப்போது?: லிட்ரோ பதில்!

சமையல் எரிவாயு கப்பல் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிவாயு சிலிண்டர்களை ஜுன் முதலாம் திகதி வரையில் விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடனான கப்பல் மே 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சமையல் எரிவாயு விநியோகம் ஜுன் முதலாம் திகதி முதல் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை.

இதனால் மக்கள் எரிவாயு சிலிண்டர் விநியோக இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த போதும், பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.