January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்: கொழும்பில் பதற்றம்!

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 50 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு மாணவர் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தின.

இந்த பேரணி கொள்ளுப்பிட்டியில் இருந்து கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் வரையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பேரணியை இலங்கை வங்கி சந்தியுடன் நிறைவுக்கு கொண்டு வந்த போதும், அந்த இடத்தில் இருந்தவர்கள் இரவு 7 மணியளவில் அந்தப் பகுதியில் பொலிஸாரினால் போடப்பட்டிருந்த வீதித் தடைகளையும் உடைக்க முயன்ற போது பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

Video: https://fb.watch/dhWQ_sVdja/