January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி அதீஷாவுக்கு என்ன நடந்தது?: சடலம் மீட்பு!

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம – அட்டலுகம பகுதியில் காணாமற்போயிருந்த 9 வயதான சிறுமி அதீஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அட்டுலுகம – எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி நேற்று முற்பகல் முதல் காணாமல் போயிருந்தார்.

நேற்று காலை 10 மணியளவில் வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த சிறுமி வீடு திரும்பியிருக்கவில்லை.

இதனை தொடர்ந்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து, விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததுடன், சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி வீதியில் பயணிக்கும் சீசீடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

எனினும் அதற்கு பின்னர் சிறுமிக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.

இவ்வாறான நிலைமையில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம பள்ளிவாசலை அண்மித்து காணப்படும் சதுப்பு நிலத்திலிருந்து இன்று மாலை சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.