January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆவது திருத்தம்: ஜுன் 3 இறுதி முடிவு!

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.

வரைவு திருத்தம் தொடர்பான அவதானிப்புகளை கட்சித் தலைவர்கள் முன்வைப்பதே கூட்டத்தின் நோக்கமாகும்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) இறுதிக் கூட்டமொன்றை நடாத்தி வரைபை பூர்த்தி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தரப்பினர் மேலதிக விளக்கத்தைப் பெற விரும்பினால் நீதி அமைச்சரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.

-(3)