சமையல் எரிவாயு விநியோகம் மேலும் தாமதமடையலாம் என்று லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
3200 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இலங்கை வரும் கப்பல் இன்று முற்பகல் கொழும்புத் துறைமுகத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்தக் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் நாளைய தினமும் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியாது என்றும், இதனால் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேலும் 7500 மெட்ரிக் டொன் எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் கப்பல்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.