January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட சிறைத் தண்டனை!

போலித் தகவல்களை முன்வைத்து சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுகொண்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றத்தினால் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட போதே அவருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக சஷி வீரவன்சவுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டப் பணத்தை செலுத்தத் தவறினால் அவரின் சிறைத் தண்டனை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.