அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை பிரதமர் எடுத்ததாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும். இதன்படி வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவித்துள்ளதாகவும் நேற்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தனர்.
இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.