January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கை மக்களுக்காக இந்தியா தொடா்ந்தும் துணை நிற்கும்”: பிரதமர் மோடி

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவோம் என்று இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தற்போது கடினமான காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நிதியுதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கிவருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்காக இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்தும் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.