அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு முகம்கொடுக்கும் வகையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் வாரங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், அதனை தயாரிக்கும் அதிகாரிகளிடம் பிரதமர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை புதிய வரவு செலவுத் திட்டத்தில் வரி மறுசீரமைப்பை செய்து வரிகளை அதிகரிப்பதற்கான யோசனைகளும் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ளது.