அடுத்துவரும் 6 நாட்களுக்குள் லாஃப் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
டொலர் நெருக்கடியை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக லாஃப் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை.
இந்நிலையில், எரிவாயு கப்பலுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுக்கான நாணய கடிதங்களை திறக்க முடிந்ததால், அடுத்த 6 நாட்களுக்குள் எரிவாயுவை சந்தைக்கு விநியோகம் செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை இன்றும், நாளையும் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
எரிவாயு கப்பல் 27 ஆம் திகதியே இலங்கை வரவுள்ளதாகவும் இதன்படி 28 அல்லது 29 ஆம் திகதி முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.