இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் பலர் தொழில்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்காது போகுமாக இருந்தால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் வருமானத்தை இழக்கும் நிலைமை ஏற்படக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சில காலத்திற்கு தொடரலாம் என்றும், இதன்போது பல்வேறு சவால்களுக்கு நிதித் துறை முகம்கொடுக்க நேரிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.