January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பணிக்கு அழைக்கப்படும் அரச ஊழியர்கள் தொடர்பில் சுற்றுநிருபம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு அரச நிறுவனங்களில் செலவுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்திற்கு அமைவாக மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏதுவாக, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் மே 26 முதல் சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் தொடர்பில் நிறுவன தலைவர் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.