2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை திருத்தி இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 வாரங்களுக்குள் அதனை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவசியமற்ற அபிவிருத்தித் திட்டங்களை தவிர்த்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலும் மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்வைத்தும் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.