பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை இவர் பதவியேற்றுள்ளார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், எவரும் குறித்த அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க முன்வராத காரணத்தினாலேயே பிரதமர் இந்தப் பதவியை பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நிதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு பல வழிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹர்ஷ டி சில்வாவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரும் அதனை ஏற்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.