முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கப் போவதில்லை என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையியே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன என்றும் ஆனால் அவை தவறான செய்திகள் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை மக்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுகின்றோம் என்றும், இதன்படி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்தளவிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இலங்கைக்கு உதவுவதற்கென சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.