எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது ஆரம்பக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆட்டோ கட்டணத்தை கிலோ மீட்டர் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.