November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை அண்மித்த சல்லிசாம்பல் தீவு பகுதியிலும் மற்றும் அதனை அண்மித்த கடல் பகுதியில் படகொன்றில் இருந்தும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மே 23 ஆம் திகதி இரவு குறித்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.

இவர்களிடையே 7 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், அம்பாறை, இரத்தினப்புரி, கம்பஹா மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

This slideshow requires JavaScript.