எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுப் போக்குவரத்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியுடன் எரிபொருள் விலைகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
இறக்குமதி, விநியோகம், வரி உள்ளிட்ட செலவுகளை அடிப்படையாகக் கொண்டு விலைச்சூத்திரத்திற்கு அமையவே இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இலாபம் இதற்குள் உள்ளடக்கப்படவில்லை என்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்றால் போன்று பஸ், ரயில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.